ஆண் நண்பருடன் பாத் டப்பில் ரொமான்ஸ்!! மாளவிகா மோகனனால் ஷாக்கான ரசிகர்கள்..
மலையாளத்தில் 2013ல் வெளியான பட்டம் போலே என்ற படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகியவர் நடிகை மாளவிகா மோகனன். இப்படத்தினை தொடர்ந்து நிர்ணயம், தி கிரேட் ஃபாதர் போன்ற மலையாள படத்திலும் கன்னடம், இந்தி மொழிகளிலும் நடித்து வந்தார்.
அதன்பின் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் பூங்கொடி மாலிக் ரோலில் நடித்து அறிமுகமாகினார். அதன்பின் நடிகர் விஜய்யின் மாஸ்டர், தனுஷின் மாறன் படத்திலும் கதாநாயகியாக நடித்தார்.
இரு படத்திலும் சரியான வரவேற்பை பெறாமல் மலையாளத்தில் கிறிஸ்டி படத்தில் சுறுவயது நடிகருடன் நடித்தார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது விக்ரம் நடிப்பில் தங்கலான் படத்தில் பிஸியாக நடித்தும் வருகிறார். இந்நிலையில், ஆண் நண்பர் ஒருவரின் பிறந்தநாளில் பாத் டப்பில் இருவரும் உட்கார்ந்தபடி ரொமான்ஸ் செய்த புகைப்படத்தை மாளவிகா இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.
சில படங்களை இயக்கியும், தயாரித்தும் இருக்கும் Abhinav என்பவர் தான் அவர். அவருடன் எடுத்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.