இரண்டாம் திருமணம் செய்த 40வயது நடிகருடன் இணையும் மலையாள நடிகை மமிதா.. யார் தெரியுமா
Vishnu Vishal
Mamitha Baiju
By Kathick
மலையாள திரையுலகில் சென்சேஷனல் நடிகையாக மாறியுள்ளார் மமிதா பைஜூ. இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்ட நாயகியான இவர் தமிழில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த ரெபெல் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இது இவருடைய முதல் தமிழ் திரைப்படமாகும். இதை தொடர்ந்து அடுத்ததாக விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் இயக்கி வருகிறார்.
விஷ்ணு விஷால் கடந்த 2018ஆம் ஆண்டு தனது முதல் மனைவி ரஜினி நட்ராஜ் என்பவரை விவாகரத்து செய்தார். பின் Jwala Gutta என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.