டேய் தகப்பா...மகனின் முன்னாள் காதலியை பிளான் போட்டு மகனுக்கே அம்மாவாக்கிய அப்பா...
China
Gossip Today
By Edward
என்னதான் பிள்ளைகள் காதலித்து வந்தாலும் அவர்களின் காதலை ஏற்று திருமணம் செய்து வைப்பது பெற்றோர்களின் கடமையாக இருக்கும். ஆனால், சீனாவில் ஒரு அப்பா செய்த செயல் உலகையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.
டேய் தகப்பா
சீனாவை சேந்த ஒரு நபரின் தந்தை, காதலியை பிரேக்கப் செய்யுமாறு மகனை வற்புறுத்தி, அதே பெண்ணை 6 மாதத்தில் காதலித்து திருமணம் செய்துகொண்ட சம்பவம் தான் இது. தனது காதலியே தனக்கு தாயாக வந்ததால் அறிந்த மகன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவள் ஏழை, உன்னிடம் உள்ள பணத்தையே விரும்புகிறாள் என்று மகனிடம் கூறி அவரின் மனதை மாற்றிவிட்டு, அதே பெண்ணிற்கு விலையுயர்ந்த பரிசுகளை கொடுத்து காதலிக்க வைத்திருக்கிறார் தந்தை.
இந்த செய்தியை பார்த்த நெட்டிசன்கள், அபூர்வ ராகங்கள் கதை பாணியில் தகப்பன் இப்படி செஞ்சிட்டானே என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.