சாப்பிடக்கூட பணிமில்லாமல் கஷ்டப்பட்டவர் ஹர்திக்..இப்போ..!! நீதா அம்பானி பாராட்டு..
உலகின் பணக்காரர் பட்டியலில் டாப் 10ல் இருப்பவர் தான் முகேஷ் அம்பானி. பிரமாண்டத்திற்கு பேர் போன அம்பானியின் குடும்பம் பல தொழில்களை செய்து கொண்டிருக்கிறது. முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானியும் பல விஷயங்களை செய்து வருகிறார்.
ஐபிஎல் மும்பை அணியின் உரிமையாளராக இருக்கும் நீதா அம்பானி, கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா பற்றி சில தகவலை சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து கொண்டார். அதில், ராஞ்சி கோப்பை மற்றும் உள்நாட்டு தொடர்களுக்கு நானும் என் குழுவும் சென்று வீரர்களை சந்தித்து பேசுவோம்.
அப்போது இரண்டு மெலிந்த இளம் வீரர்களுடன் உரையாடினோம். அவர்கள் பணமில்லாததால் மூன்று ஆண்டுகளாக மேகி மற்றும் நூடுல்ஸ் தவிர வேறு எதுவும் சாப்பிடவில்லை என்று கூறினார்கள்.
ஆனால், வாழ்க்கையில் பெரியதாக சாதிக்க வேண்டும் என்ற உற்சாகத்தை அவர்களிடம் பார்த்தேன், அது ஹர்திக் மற்றும் குர்ணால் பாண்டியா தான். 2015ல் ஐபிஎல் ஏலத்தில் ஹர்திக் பாண்டியாவை 10 ஆயிரம் அமெரிக்க டாலர்களில் வாங்கினேன்.
இன்று அவர் எங்கள் அணியின் பெருமைமிக்க கேப்டன். அடுத்தாண்டே எங்கள் அணியில் வித்தியாசமான உடல்மொழியுடன் பந்துவீசும் இளம் வீரரை அறிமுகப்படுத்தினோம், மற்றதெல்லாம் வரலாறு, என்றும் நீதா அம்பானி பெருமையுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.