மணிரத்னம் அப்படி தான் தலையிடமாட்டார், எந்த அர்த்தமும் இல்லை.. மனைவி சுஹாசினி உடைத்த உண்மை

Tamil Cinema Mani Ratnam Thug Life
By Bhavya May 19, 2025 06:30 AM GMT
Report

மணிரத்னம் 

மணிரத்னம் தற்போது கமல் - சிம்பு இணைந்து நடித்து இருக்கும் தக் லைப் படத்தை இயக்கி இருக்கிறார். இப்படம் வரும் ஜூன் 5 - ம் தேதி வெளியாக உள்ள நிலையில், சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியானது.

மணிரத்னம் அப்படி தான் தலையிடமாட்டார், எந்த அர்த்தமும் இல்லை.. மனைவி சுஹாசினி உடைத்த உண்மை | Mani Ratnam Wife Open Up About Her Husband

உடைத்த ரகசியம்

இந்நிலையில், மணிரத்னம் குறித்து அவரது மனைவியும், நடிகையுமான சுஹாசினி பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், " மணிரத்னத்துக்கும் எனக்கும் சரியான புரிதல் இருப்பது இசையில்தான். அவர் மிகவும் பொறுமையாக இருப்பவர். நான் அவரிடம் சண்டை போட வேண்டும் என்ற எண்ணத்தில் சென்றால் அந்த சூழ்நிலையையே காமெடியாக மாற்றிவிடுவார்.

மணிரத்னம் அப்படி தான் தலையிடமாட்டார், எந்த அர்த்தமும் இல்லை.. மனைவி சுஹாசினி உடைத்த உண்மை | Mani Ratnam Wife Open Up About Her Husband

எங்கள் தலையில் இடியே விழக்கூடிய விஷயமாக இருந்தாலும்கூட அதை காமெடியாக மாற்றிய தருணங்கள் எல்லாம் பல உண்டு.

என்னுடைய வேலைகளில் அவர் பெரிதாக தலையிடமாட்டார். ஏனெனில் அதை கவனிக்கக்கூடிய அளவுக்குக்கூட அவருக்கு நேரம் இல்லாமல் அவருடைய வேலைகளில் முழுவதுமாக மூழ்கிவிடுவார்.

சின்ன சின்ன விஷயங்களில் கட்டுப்பாட்டோடு இருந்துவிட்டு பெரிய விஷயங்களை எளிதாக விடுவதில் எந்த அர்த்தமும் இல்லை" என்று கூறியுள்ளார்.