ரவீனா உடன் அப்படியொரு உறவு, ஆனா இப்போ நிக்சன் கூட.. பிக் பாஸ் மணிச்சந்திரன் வருத்தம்
சமீபத்தில் தான் பிக் பாஸ் சீசன் 7 நிறைவு அடைந்தது. இந்த நிகழ்ச்சியில் ரவீனா, மணி காதல் ஜோடிகளாக வலம் வந்தார்கள்.
இவர்கள் இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் முன்பு, நாங்கள் அண்ணா தங்கை போன்று தான் பழகுறோம் என்று கூறினார்கள்.
இவர்கள், உண்மையில் காதலர்களா இல்லை நிகழ்ச்சிக்காக அப்படி செய்தார்களா என்று பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் கேள்வி இருந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக பேசிய மணி, நட்பை தாண்டிய உறவு இருந்தது, இது பற்றி விளக்கம் கொடுக்கும் வேண்டும் என்றால் ரவீனா இந்த இடத்தில் இருக்கு வேண்டும். ஆனால் ரவீனா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரொம்ப மாறிவிட்டார். இப்போது விஜய் டிவியில் டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் ஆடிக் கொண்டிருக்கிறார்.
ரவீனா என்னை பற்றி நிக்சனிடம் பேசியது பற்றி பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர். ஏன் அப்படி அவுங்க பேசினார்கள் என்று தெரியவில்லை.
எதுவாக இருந்தாலும் என்கிட்ட சொல்லி இருக்கலாம். ஆனால் அவர்கள் இப்படி பன்னிட்டாங்க என்று மணி வருத்தத்துடன் பேசியுள்ளார்.
You May Like This Video