நகுலுடன் கிஸ் சீன் 15 டேக்குக்கு மேல போச்சு!! தேவயானி முன் உண்மையை கூறிய பாய்ஸ் பட பிரபலம்..

Nakul Shankar Shanmugam Gossip Today
By Edward Jul 21, 2024 03:29 AM GMT
Report

இயக்குனர் ஷங்கரின் பிரம்மாண்டமான படங்களில் ஒன்றாக வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம் பாய்ஸ். சித்தார்த், நகுல், தமன், ஜெனிலியா, பரத், மணிகண்டன் உள்ளிட்ட பலரின் சினிமா கேரியருக்கு மிகப்பெரிய படமாக பாய்ஸ் படம் அமைந்தது.

நகுலுடன் கிஸ் சீன் 15 டேக்குக்கு மேல போச்சு!! தேவயானி முன் உண்மையை கூறிய பாய்ஸ் பட பிரபலம்.. | Manikandan Open Talk Boys Scene With Nakul

இப்படத்தினை தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்து வந்த மணிகண்டன், நகுல் நடிப்பில் உருவாகியுள்ள, வாஸ்கோடகாமா படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு நடிகை தேவயானி, பாக்யராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய மணிகண்டன் பாய்ஸ் படத்தில் தனக்கும் நகுலுக்கும் இடையே எடுக்கப்பட்ட முத்தக்காட்சியை பற்றி நகைச்சுவையாக பகிர்ந்துள்ளார்.

நகுலுடன் கிஸ் சீன் 15 டேக்குக்கு மேல போச்சு!! தேவயானி முன் உண்மையை கூறிய பாய்ஸ் பட பிரபலம்.. | Manikandan Open Talk Boys Scene With Nakul

எனக்கும் நகுலுக்கும் எடுக்கப்பட்ட முதல் காட்சியே உதட்டோடு உதடு முத்தமிட்டுக்கொள்ளும் காட்சி தான். இயக்குனர் ஷங்கர் ஒரு காட்சி நன்றாக வர அதற்கென்று மிகவும் மெனக்கெடுவார். அப்படி அந்த காட்சியை 15 முறைக்கு மேல் எடுக்கபட்டது. ஆனாலும் அதை சகித்துக் கொண்டு சிறப்பாக நகுல் நடித்தார் என்று மணிகண்டன் கூறியிருக்கிறார்.