ஹுசைன் - மணிமேகலை ஜோடியின் பிரம்மாண்ட புதிய வீடு.. குவியும் வாழ்த்துகள்

Manimegalai
By Karthick Raja Jun 03, 2026 12:30 PM GMT
Report

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் தொகுப்பாளினி மணிமேகலை. சன் மியூசிக்கில் தனது பயணத்தை தொடங்கிய இவர், பின் விஜய் டிவியில் களமிறங்கினார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து ரசிகர்களின் மனதில் தனக்கென்று தனி இடத்தையும் பிடித்தார். ஆனால், சில பிரச்சனைகள் காரணமாக அங்கிருந்து மணிமேகலை வெளியேறினார். இதன்பின், ஜீ தமிழ் சேனலில் இணைந்த இவர் நடன நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

ஹுசைன் - மணிமேகலை ஜோடியின் பிரம்மாண்ட புதிய வீடு.. குவியும் வாழ்த்துகள் | Manimegalai Hussain Built New House

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தாண்டி தனியார் நிகழ்ச்சிகள், இசை வெளியீடு போன்ற பெரிய நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தற்போது மணிமேகலை தனது கணவர் ஹுசைனுடன் சேர்ந்து தங்களுடைய சொந்த ஊரில் பிரம்மாண்டமான வீடு கட்டியுள்ளனர். அந்த வீட்டின் கிரகப்பிரவேசம் பிரம்மாண்டமாக நடந்துள்ளது.

ஹுசைன் - மணிமேகலை ஜோடியின் பிரம்மாண்ட புதிய வீடு.. குவியும் வாழ்த்துகள் | Manimegalai Hussain Built New House

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் தனது வீட்டின் புகைப்படத்தையும் மணிமேகலை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை இவர்களுக்கு தெரிவித்து வருகின்றனர். 

மணிமேகலை வெளியிட்ட புகைப்படங்களை பார்க்க இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள்