அரியவகை நோயால் பாதிகப்பட்ட நடிகை சமந்தா செய்த செயல்!! அதை நிறுத்தச்சொன்ன பிரபல நடிகர்
கோலிவுட், டோலிவுட் என இரண்டிலும் பிரபல நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் உருவாகியுள்ள சாகுந்தலம் திரைப்படம் இந்த மாதம் வெளியாகவுள்ளது.
இவர் 2017 -ம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில தனிப்பட்ட காரணத்தால் இருவரும் விவாகரத்து பெற்றனர்.

சமந்தா, மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு தற்போது அதில் இருந்து மீண்டு வருகிறார். மேலும் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை அவரின் சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் பிரபல நடிகர் மனோஜ் பாஜ்பாய் பேட்டி ஒன்றில் சமந்தா குறித்து பேசியுள்ளார். அதில் அவர், "சமந்தா செய்யும் உடற்பயிற்சி வீடியோக்களை நான் பார்த்தேன். அது போன்ற விஷயங்கள் அவருக்கு வலி ஏற்படுத்தும். அதனால் அதை நிறுத்திவிட்டு எளிமையான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்" என்று அட்வைஸ் கொடுத்துள்ளார்.
