மரியாதை இல்லாத விருதுகள்..மேடையில் யாரை மறைமுகமாக தாக்கி பேசினார் மாரி செல்வராஜ்..
மாரி செல்வராஜ்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக திகழ்ந்து வரும் மாரி செல்வராஜ், நடிகர் சித்ரா லட்சுமணன் வழங்கிய விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பைசன் படத்திற்கான விருதை பெற்று சில விஷயங்களை பேசியிருக்கிறார் மாரி செல்வராஜ்.
சினிமா விமர்சனங்களில் சித்ரா லட்சுமணன் சாரின் விமர்சனம் மிகவும் நன்றாகவும் நேர்த்தியாகவும் இருக்கும். சினிமா குறித்த தெளிவான அறிவு கொண்டவர் என்பதால் அவர் விமர்சனத்திற்கு பயன்படுத்தும் வார்த்தைகள் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த விருதுவிழாவுக்கு அழைத்தபோது, எனக்கு நம்பிக்கையாக இருந்தது.

மரியாதை இல்லாத விருதுகள்
காரணம் இன்று விருதுகள் வாங்குவது எப்படி ஆகிவிட்டது என்றால், சில படங்கள் வரக்கூடாது, அவை வெற்றிப்பெறக் கூடாது என்று நினைப்போம். வெற்றிப்பெறக் கூடாது என்றால், சினிமா இன்னும் செலிப்பாக மாற வேண்டும் என்றும் முன்னோக்கி போகவேண்டும் என்று நாம் ஆசைப்படுவோம். அதற்காக நாம் விடாபிடியாக முயற்சி செய்து காத்திரமாக படங்கள் எடுப்போம்.
ஆனால் எல்லா படங்களுக்கும் விருது என்று கொடுக்கும்போது அப்படியான விருது நிகழ்ச்சிகளுக்கு நாம் போக வேண்டுமா? அந்த விருதை வாங்க வேண்டுமா? என்றெல்லாம் நான் யோசித்திருக்கிறேன்.

ஏனென்றால், அத படங்களுக்கு கொடுக்கிறார்கள், அதேபோல் நம் படத்திற்கும் கொடுக்கிறார்கள் என்றில்லை. மாறாக இந்த பிரச்சனையை எப்படி கையாள்வது என்பதுதான். இந்த விருதுக்கு சித்ரா லட்சுமிணன் சார் என்னை அழைத்தபோது, இவர்களுக்குதான் என்று இல்லாமல், எது சிறந்ததோ, எது சரியானதோ அதற்குத்தான் விருது என்று அவர் கூறினார்.
இந்த நம்பிக்கை எனக்கு மிகவும் பிடித்தது. விருது என்றால் அது இதுதான் என்று சொல்லக்கூடிய வகையில் இருக்க வேண்டும். நமக்கு அந்த விருது கிடைக்கவில்லை என்றாலும், அந்த விருது மீது நமக்கு மரியாதை இருக்க வேண்டும். விருது கிடைத்தும் மரியாதை இல்லாத விருதுகள் என்பது மிகவும் மனக்கசப்பானது. மனக்கசப்பை உண்டாக்கும் விருதாக சித்ரா லட்சுமணன் சார் வழங்கும் விருது இருக்காது என்று நம்புகிறேன் என்று மாரி செல்வராஜ் பேசியிருக்கிறார்.