தேசிய விருதினை கோட்டையை விட்ட மாஸ்டர் JD.. வெச்சு செய்யும் நெட்டிசன்கள்..
இந்தியளவில் சினிமாத்துறையை சேர்ந்த கலைப்படங்களை கவுரவிக்கும் விதமாக கடந்த 68 ஆண்டுகளாக கொடுக்கப்பட்டு வருவது தேசிய திரைப்பட விருது. அந்தவகையில் 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதினை நேற்று தேசிய திரைப்பட விருது குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அதில் தென்னிந்திய திரைப்படங்கள் சூரரைப்போற்று, மண்டேலா, சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், அய்யப்பனும் கோஷியும் உள்ளிட்ட பல படங்களுக்கு விருது கொடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் சூரரைப்போற்று படத்திற்கு மட்டும் சிறந்த நடிகர், நடிகை, படம், பின்னணி இசை, திரைக்கதை என 5 விருதுகளை கைப்பற்றியது. இந்நிலையில் எங்கடா மாஸ்டர் ஜே. டி நேஷனல் அவார்ட் என்ற மீம் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது.
விஜய்யை கிண்டல் செய்யும் வண்ணம் சிலர் எடிட் செய்த மீம் புகைப்படத்தை பார்த்த தளபதி ரசிகர்கள் மாஸ்டர் படம் வெளியானது 2021. அடுத்த ஆண்டு தான் கொடுப்பாங்க என்று கூறி வருகிறார்கள். அப்படி மாஸ்டர் JD அடுத்த ஆண்டு சிறந்த நடிகர் விருதை பெறுவார் என்று கூறி கலாய்த்தும் வருகிறார்கள்.
— Shittier Tamil Movie Details (@TamilDetails) July 22, 2022