அட கடவுளே.. மாஸ்டர் படம் இந்த படத்தோட காப்பியா? ஒரு சீன் கூட விட்டுவைக்கல

Mammootty Vijay Lokesh Kanagaraj Tamil Actors
By Dhiviyarajan Feb 19, 2024 12:33 PM GMT
Report

லோகேஷ் கனகராஜ், தமிழ் சினிமாவில் சென்சேஷனல் இயக்குனராக வலம் வருகின்றார்.கடந்த ஆண்டு  இவர் இயக்கத்தில் வெளிவந்த லியோ படம் படம் பல ட்ரோல்களை சந்தித்தது.

மேலும் படத்தில் இடம் பெற்றுள்ள நரபலி காட்சிகளால் லோகேஷ் கனகராஜ் மீது பல விமர்சனங்கள் வந்தது. தனது தவறுகளை ஒத்துக் கொண்ட லோகேஷ், இனி இயக்கவிருக்கும் படங்களை கவனமாக கையாளுவேன் என பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

அட கடவுளே.. மாஸ்டர் படம் இந்த படத்தோட காப்பியா? ஒரு சீன் கூட விட்டுவைக்கல | Master Movie Is Copy Of Malayalam Movie

இந்நிலையில் மலையாளத்தில் கடந்த 1989 -ம் ஆண்டு மம்மூட்டி நடிப்பில் வெளிவந்த முத்ரா படத்தின் காப்பி தான் லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் திரைப்படம் என்று ரசிகர்கள் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

முத்ரா படத்தில் இருக்கும் காட்சிகள் அப்படியே மாஸ்டர் படத்திலும் இருக்கிறது என்று நெட்டிசன்கள் கூறுகின்றனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ வீடியோ..