விஜய் இடுப்பில் உட்கார்ந்த சூப்பர் சிங்கர் பூவையார்-ஆ இது!! அதுக்குள்ள 12th முடிச்சிட்டியா..
ஸ்டார் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக ஆதர்வை பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சியின் ஜூனியர் சீசன் 6-ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் பூவையார். இரண்டாம் ரன்னர் அப் இடத்தினை பெற்று பிரபலமான பூவையார் சிறு வயதிலேயே பாடகனாக மாறினார்.
கொரிலா படத்தில் சிம்ப் என்ற பாடலை பாடிய பூவையார், அதன்பின் பிகில் படத்தில் வெறித்தனம் பாடலை விஜய்யுடன் சேர்ந்து பாடினார். அதன்பின் ஒருசில பாடல்களை பாடிய பூவையார், விஜய்யின் மாஸ்டர் படத்தில் உண்டியல் கதாபாத்திரத்தில் நடித்தார்.
சிறுவனாக இருந்த பூவையார், விஜய் டிவியில் ஆரம்பித்துள்ள, சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
அந்நிகழ்ச்சியில் மாகாபா எத்தனாவது படிக்கிற என்று கேட்டது, 12வது முடிச்சிட்டு காலேஜ் போறேன்னு, இந்த வருஷம் தான் காலேஜ்ன்னு சொன்னதும் அனைவரும் ஷாக்காகியுள்ளனர்.
இதை கேட்ட ரசிகர்கள் வாய்ஸ் மாறிடிச்சி, காலேஜ் படிக்கிறானா என்று ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.