பல கோடியில் கடனாளியாக நிற்கும் சிவகார்த்திகேயனின் பினாமியே மாவீரன் தயாரிப்பாளர் தான்!! சம்பளத்தை ஏத்த இப்படியொரு பிளான்..

Sivakarthikeyan Gossip Today Maaveeran
By Edward Jul 29, 2023 04:00 PM GMT
Report

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி முன்னணி நடிகையாகவும் பல கோடி சம்பளம் வாங்கும் டாப் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். கடந்த சில வாரங்களுக்கு முன் அவர் நடிப்பில் மாவீரன் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

படம் தற்போது வரை கிட்டத்தட்ட 75 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளதாக குறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் வலைப்பேச்சு அந்தணன் பேட்டியொன்றில், இந்த படத்தின் தயாரிப்பாளரே சிவகார்த்திகேயனின் பினாமி தான் என்று சினிமாவட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

மாவீரன் படமே சிவகார்த்திகேயனின் படம் என்றும் படம் வசூலித்த உண்மை தொகையை விட அதிகமான தொகையை கூறினால் தான் சிவகார்த்திகேயனின் சம்பளம் அதிகரிக்கும்.

அதற்காக தான் 75 கோடி வசூலித்தது பொய் என்று தெரிதததால் தான் ப்ளூ சட்டை மாறன் மோசமான விமர்சனம் கொடுத்திருக்கிறார்.

இதுபோல் பல தாயாரிப்பாளர்கள் நடிகர்களின் சம்பளத்தை ஏற்ற இப்படியொரு பொய்யை கூறி வருகிறார்கள் என்று அந்தணன் தெரிவித்துள்ளார்.

இதற்கெல்லாம் காரணம் சிவகார்த்திகேயன் ஏற்கனவே பல கோடியில் கடனை வைத்திருப்பதால் அதை அடைக்க இப்படியொரு பிளான் போட்டிருக்கிறார் என்றும் சினிமா வட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது.