தொட்டு பார்த்த மயில்சாமியை அடித்து அவமானப்படுத்திய கார் ஓனர்!! மனைவி குடும்பத்தினர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்..
தமிழ் சினிமாவில் ஆர்ஜேவாக பணியாற்றி தற்போது நடிகராகவும் இயக்குனராகவும் திகழ்ந்து வருபவர் ஆர்ஜே பாலாஜி. தற்போது அவர் நடிப்பில் சிங்கப்பூர் சலூன் என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பை மக்களிடம் பெற்று வருகிறது.
இப்படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் பேட்டிகளிலும் கலந்து வரும் பாலாஜி, மறைந்த நடிகர் மயில்சாமி பற்றிய ஒரு சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார். ஒருமுறை நான் ஷூட்டிங்கில் இருக்கும் போது மயில்சாமி சார் பென்ஸ் காரில் வந்தார். எப்போது எடுத்தீங்க காரை என்று அவரிடம் நான் கேட்டேன்.
அதற்கு அவர் என் மனைவி என்னுடைய 50வது பிறந்தநாளுக்கு வாங்கி கொடுத்தாள் என்றும் ஒருத்தனுடைய பென்ஸ் காரை தொட்டேன் என்னை அடித்துவிட்டான்.
அதை என் பொண்டாட்டியிடம் கூறி அழுதேன், அதனால் தான் கார் பரிசாக என் மனைவி கொடுத்தாள் என்று கூறியிருக்கிறார். இத்தனை வருட சினிமாவில் பயணித்ததற்கு இது எனக்கு ஒரு பெருமை இந்த காரில் தெரியும் என்று மயில்சாமி கூறியதாக ஆர் ஜே பாலாஜி தெரிவித்துள்ளார்.