ரஜினி பட ஷூட்டிங்கில் கதறி அழுதுவிட்டேன்!! நடிகை மீனா ஓபன் டாக்..

Rajinikanth Meena Gossip Today Tamil Actress
By Edward Feb 22, 2026 02:30 AM GMT
Report

நடிகை மீனா

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 90ஸ் காலக்கட்டத்தில் டாப் ஹீரோயினாக திகழ்ந்து கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகை மீனா. தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் மற்றும் படங்களிலும் நடித்தும் வருகிறார்.

ரஜினி பட ஷூட்டிங்கில் கதறி அழுதுவிட்டேன்!! நடிகை மீனா ஓபன் டாக்.. | Meena Recalls Emotional Childhood Moment Rajini

கடந்த 2024ல் அவரது கணவர் வித்யாசாகர் இறந்தப்பின் தன் மகளுடன் வாழ்ந்து வரும் மீனா, இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்ற தகவல் எல்லாம் இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இதுகுறித்து பல முறை மீனா கோபப்பட்டு பேட்டியின்றில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

எங்கேயோ கேட்ட குரல்

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், குழந்தை நட்சத்திரமாக ரஜினிகாந்தின் எங்கேயோ கேட்ட குரல் படத்தில் நடித்தபோது நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அதில், எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடித்த எங்கேயோ கேட்ட குரல் படத்தில் நடித்தேன்.

ரஜினி பட ஷூட்டிங்கில் கதறி அழுதுவிட்டேன்!! நடிகை மீனா ஓபன் டாக்.. | Meena Recalls Emotional Childhood Moment Rajini

அப்படத்தில் எனக்கு சூடு வைப்பது போன்ற காட்சி எடுத்தார்கள். உண்மையில் எனக்கு சூடு வைப்பார்களோ என்று நினைத்து, ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே கதறி அழுதுவிட்டேன். யார் சமாதானம் செய்தாலும் கேட்கவில்லை. தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தேன்.

இதன்பின் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் என்னை தூக்கொண்டு கொஞ்சம் தூரம் நடந்து சாக்லேட்டுகள் எல்லாம் வாங்கி கொடுத்து, சூடெல்லாம் வைக்கமாட்டோம் என்றார். அதன்பின் நான் சமாதானமானேன். அதனை நான் வாழ்க்கையில் மறக்கவே மாட்டேன் என்று தெரிவித்துள்ளார் நடிகை மீனா.