ஷூட்டிங் ஸ்பாட்டில் முடிக்காக சண்டை போட்ட சேரன்!! மீனா ஓபன் டாக்..
மீனா
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 90ஸ் காலக்கட்டத்தில் டாப் ஹீரோயினாக திகழ்ந்து கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகை மீனா. தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் மற்றும் படங்களிலும் நடித்தும் வருகிறார்.
கடந்த 2024ல் அவரது கணவர் வித்யாசாகர் இறந்தப்பின் தன் மகளுடன் வாழ்ந்து வரும் மீனா, இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்ற தகவல் எல்லாம் இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

இதுகுறித்து பல முறை மீனா கோபப்பட்டு பேட்டியின்றில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதனையடுத்து இயக்குநர் சேரனுடன் பணியாற்றியபோது நடந்த சில விஷயங்களையும் பகிர்ந்துள்ளார்.
சண்டை போட்ட சேரன்
அதில் மீனா, நான் இயக்குநர் சேரனின் வெற்றி கொடி கட்டு படத்தில் நடித்திருந்தபோது, சேரனிடம்நான் எதுவும் சொல்லாமல் கொள்ளாமல் என் தலைமுடிக்கு கலரிங் செய்து கொண்டு வந்துவிட்டேன்.

இதை பார்த்த சேரன், என்னங்க மீனா இப்படி பண்ணிட்டு வந்துட்டீங்க, இது எல்லாம் வேண்டாம், என்னோட வள்ளி இப்படி இருக்க மாட்டா. இந்த ஹேர் கலரிங் எல்லாம் வேண்டவே வேண்டாம் என்று கூறினார்.
ஆனால் நான், சேரன் நான் தான் முழுவதுமாக பின்னி ஜடை போட்டுக் கொள்வேன் அப்படி இருக்கும்போது எதற்காக இவ்வளவு யோசிக்கிறீர்கள். மக்கள் அந்தளவுக்கு எல்லாம் கவனிக்க மாட்டார்கள் என்று கூறினேன்.
உடனே அவரோ, மக்கள் கவனிக்கிறார்கள் கவனிக்கவில்லை, என் வள்ளி இப்படியிருக்க மாட்டாள், இப்படி இருக்கக்கூடாது. எனவே நீங்கள் போய் கருப்புநிறத்தில் டை அடித்துக்கொண்டு வாங்க என்று கூறினார். கிட்டத்தட்ட சண்டையே போட்டுவிட்டார்.
அவர் அன்றைக்கு நடந்து கொண்டதை பார்த்து நான் அவரை வெறுத்துவிட்டேன். என் அம்மா சொன்னப்பின், நான் கருப்பு நிற டை அடித்துக்கொண்டேன் என்று மீனா பேட்டியில் தெரிவித்துள்ளார்.