சிறுமியாக இருக்கும் மீனாவின் பக்கத்தில் இருக்கும் நடிகரின் அப்பா!! யார் தெரியுமா??

Meena Mahesh Babu
By Edward Dec 01, 2022 11:20 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட முன்னணி தமிழ், தெலுங்கு, மலையாள நட்சத்திரங்களுடன் ஜோடிப்போட்டு நடித்தவர் நடிகை மீனா.

முன்னணி இடத்தில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்து வந்த மீனா 2009ல் பெங்களூருவை சேர்ந்த வித்யா சாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி நைனிகா என்ற மகளை பெற்று சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

அதன்பின் குணச்சித்திர ரோலில் நடித்து வந்த மீனாவின் கணவர் வித்யா சாகர் ஜூன் மாதம் நுரையீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழிந்தார். இந்த சம்பவம் மீனாவுக்கு பெரிய இழப்பை கொடுத்தது. தற்போது அதில் இருந்து மீண்டு வந்த மீனா தோழிகளுடனும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டும் படங்களில் நடித்தும் வருகிறார்.

இடையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார். இந்நிலையில் நடிகை மீனா தெலுங்கு சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து சமீபத்தில் உயிரிழந்த இயக்குனரும் நடிகருமான கிருஷ்ணா அவர்களுடன் எடுத்த சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

மகேஷ் பாபுவின் அப்பாவா கிருஷ்ணா அவர்கள் சமீபத்தில் உயிரிழந்தது இந்திய சினிமாவையே அதிர்ச்சியை கொடுத்தது. அவருடன் எடுத்த அரிய புகைப்படங்களை நட்சத்திரங்கள் வெளீயிட்டு வந்தநிலையில் மீனா பதிவிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.