நடிகை மீனாட்சி சவுத்ரியின் வருங்கால கணவர் இப்படியெல்லாம் இருக்க வேண்டுமாம்..
எதிர்பார்ப்பை கூறிய நடிகை இளைஞர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வருபவர் மீனாட்சி சவுத்ரி. இவர் நடிப்பில் தமிழில் சிங்கப்பூர் சலூன், தி கோட், கொலை ஆகிய படங்கள் இதுவரை வெளிவந்துள்ளன.
அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனின் படத்தில் கதாநாயகியாக மீனாட்சி கமிட்டாகியுள்ளார் என சில தகவல்கள் இணையத்தில் உலா வருகின்றன.

இந்நிலையில், வளர்ந்து வரும் நடிகை மீனாட்சி சவுத்ரி தனது வருங்கால கணவர் எப்படியெல்லாம் இருக்க வேண்டும், என தனது எதிர்பார்ப்பை பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, "என்னை திருமணம் செய்யும் நபர் குறைந்தது 100 ஏக்கர் நிலம் வைத்திருக்க வேண்டும். சமையல் செய்ய தெரிந்திருக்க வேண்டும், துணி துவைக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும், துணிகளை இஸ்திரி செய்யவும் தெரிந்திருக்க வேண்டும். வீட்டிலுள்ள அனைத்து வேலைகளையும் கவனிக்க வேண்டும்" என்றார்.

. தனது வருங்கால கணவர் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என மீனாட்சி சவுத்ரி பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.