நான் இப்படிப்பட்டவள் தான்.. வெளிப்படையாக பேசிய நடிகை மீனாட்சி சவுத்ரி
Meenakshi Chaudhary
By Karthick Raja
ரசிகர்கள் மனம் கவர்ந்த இளம் சென்சேஷனல் தென்னிந்திய நடிகை மீனாட்சி சவுத்ரி.
இவர் நடிப்பில் வெளிவந்த சிங்கப்பூர் சலூன், கோட், லக்கி பாஸ்கர், சங்கராந்திகி வஸ்துனம் ஆகிய படங்கள் மாபெரும் அளவில் வெற்றிபெற்றது. அடுத்ததாக இவர் நடிப்பில் வ்ருஷகர்மா, Bhagam Bhag 2 ஆகிய படங்கள் வெளிவரவுள்ளன.

இந்த நிலையில், நடிகை மீனாட்சி சவுத்ரி சமீபத்திய பேட்டி ஒன்றில் என்னிடம் ஒளிவுமறைவு இல்லை என பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, "ஒளிவுமறைவு இல்லாமல் பேச பழக்கூடியவள் நான். அதனால் பல விமர்சனங்களையும் சந்தித்து இருக்கிறேன். ஆனால், எனது இந்த போக்கை மறக்கக்கூடாது என்று நினைக்கிறேன். ஏனெனில் கேமராவுக்கு பின்னால் நடிக்கக்கூடாது என்பதில் நான் மிக உறுதியாக இருக்கிறேன்" என கூறியுள்ளார்.