28 வயது நடிகையுடன் இணையும் பிரதீப் ரங்கநாதன்.. யார் அந்த நடிகை தெரியுமா?

Pradeep Ranganathan Meenakshi Chaudhary
By Kathick Dec 23, 2025 02:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் பிரதீப் ரங்கநாதன். இவர் நடிப்பில் இதுவரை லவ் டுடே, டிராகன் மற்றும் Dude ஆகிய மூன்று திரைப்படங்களும் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள LiK படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு வெளிவரவுள்ளது. இந்நிலையில், பிரதீப் ரங்கநாதனின் புதிய திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

28 வயது நடிகையுடன் இணையும் பிரதீப் ரங்கநாதன்.. யார் அந்த நடிகை தெரியுமா? | Meenakshi Chaudhary To Join Hands With Pradeep

அதன்படி, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் தனது புதிய படத்தை இயக்கி ஹீரோவாக நடிக்கவுள்ளார். Sci-fi மற்றும் காதல் கதைக்களத்தில் இப்படம் உருவாகிறது என கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தில் நடிகை மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் முதல் முறையாக பிரதீப் உடன் இணைந்து மீனாட்சி நடிக்கவுள்ளார்.

28 வயது நடிகையுடன் இணையும் பிரதீப் ரங்கநாதன்.. யார் அந்த நடிகை தெரியுமா? | Meenakshi Chaudhary To Join Hands With Pradeep