அவன்லாம் நடிகனாகி பிளைட்ல போறான்!! சூரியால் மனமுடைந்து புலம்பிய பிரபல நடிகர்..
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக திகழ்ந்து தற்போது விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி வரவேற்பை பெற்றவர் நடிகர் சூரி.
வெண்ணிலா கபடிக்குழு படத்தின் பரோட்டா சூரி என்ற பெயரெடுத்த சூரி, ஆரம்பத்தில் சிறு ரோலில் நடித்து அதன்பின் முன்னணி நடிகர்கள் படத்தில் காமெடியனாக நடிக்க ஆரம்பித்தார்.
தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருக்கும் சூரி பற்றி நடிகர் மீசை ராஜேந்திரன் புலம்பி தள்ளி இருக்கிறார். ஒரு காலக்கட்டத்தில் என்னுடன் சப்போர்ட்டிங் ஆக்டராக நடித்த சூரி தற்போது நடிகராக மாறியிருக்கிறான்.
எனக்கு பின்னால் நடிக்க வந்த சூரிக்கு இப்படியொரு வாய்ப்பு. என்னைவிட சம்பளம் கம்மியாக வாங்கி வந்தார் என்று, எனக்கு அசிஸ்டண்ட் இருந்த போது அவருக்கு இல்லை. ஆனால் 10 வருடத்திற்கு பின் அப்படியே உல்டாவாக மாறியிருக்கிறது.
நான் பஸ்ஸில் வழக்கமாக போகிறேன். சூரி அசிஸ்டண்ட்டிடம் கேட்கும் போது, சார் பிளைட்டில் வருவார் என்று கூறினார். அதனால் மனவருத்தமடைந்ததாகவும், என் மைனஸ் தெரிந்து அதை மாற்றும் நிலையில் இருக்கிறேன் என்று சித்ரா லட்சுமணன் பேட்டியில் மீசை ராஜேந்தரன் புலம்பி இருக்கிறார்.