தல அஜித்தின் இரு படங்களை கோடிகளில் வாங்கிய நடிகர்! அவருக்கு ரொம்பவே செட்டாகுதாம்

ajith tollywood chiranjeevi vedhalam yennaiarindhaal
By Jai Aug 31, 2021 07:05 AM GMT
Report

தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு சினிமாவில் தமிழ் படங்கள் ரீமேக் செய்து வருகிறார்கள். அந்தவகையில் சமீபத்தில் நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை வக்கீல் சாப் என்ற பெயரில் பவன் கல்யாண் நடித்து மாபெரும் வெற்றியை கொடுத்தார். இதையடுத்து அஜித்தின் இரு படங்களை வாங்கி ரீமேக் செய்யவுள்ளார் தெலுங்கு மெகாஸ்டார்.

நடிகர் அஜித் நடித்து வெற்றிப்பெற்ற படமான வேதாளம் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி போலோ சங்கர் என்ற பெயரில் ரீமேக் செய்து ஆரம்பித்துவிட்டனர். அஅஜித்தின் தங்கையாக நடித்த லட்சுமி மேனனின் கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளாராம்.

இதைதொடர்ந்து, கெளதம்வாசுதேவ் மேன இயக்கத்தில் அஜித் நடித்து வெற்றி பெற்ற படம் என்னை அறிந்தால். தற்போது அப்படத்தையும் ரீமேக் செய்யவுள்ளதாக சிரஞ்சீவி முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சில காலம் ஓய்வில் இருந்த சிரஞ்சீவி கத்தி படத்தில் ரீமேக்கில் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.