கணவருடன் ஜாலியான ஹனிமூன்... கலக்கல் புகைப்படங்களை வெளியிட்ட மேகா ஆகாஷ்

Megha Akash
By Yathrika Oct 08, 2024 11:30 AM GMT
Report

மேகா ஆகாஷ்

தமிழில் சில படங்களே நடித்தாலும் மக்களின் மனதில் முக்கிய இடம் பிடித்த இளம் நடிகை மேகா ஆகாஷ். 

சிம்பு, தனுஷ் படங்களிலும் மலையாளத்திலும் தொடர்ந்து படங்கள் நடித்து வந்தவர் திடீரென தனது கல்யாண அறிவிப்பு வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். 

ஆனாலும் அவரது திருமணத்திற்கு ரசிகர்களும் மனதார வாழ்த்தினார்கள். இந்த நிலையில் திருமணம் முடித்த கையோடு ஹனிமூன் கிளம்பியுள்ள மேகா ஆகாஷ் அந்த புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். 

அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.