சோதிக்காதீங்கப்பா.. மெய்யழகன் லியோ மாதிரி இருக்கா!! கலாய்த்து தள்ளிய ப்ளூ சட்டை..
மெய்யழகன்
ஜோதிகா, சூர்யாவின் 2 டி தயாரிப்பில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளியான படம் மெய்யழகன்.
படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தன் பங்கிற்கு மெய்யழகன் விமர்சனத்தை கொடுத்திருக்கிறார்.
ப்ளூ சட்டை மாறன்
அதில், படத்தின் 2 ஆம் பாதி விஜய்யின் லியோ படம் மாதிரி இருக்கு என கூறி சோலியை முடித்திருக்கிறார். சமீபகாலமாக வெளியாகிய படங்களுக்கு இந்த 2 ஆம் பாதி சாபக்கேடாக இருக்கத்தான் செய்கிறது. முதல் பாதி சூப்பரக இருந்தாலும் 2 ஆம் பாதியில் ஏகப்பட்ட லேக் வந்து படத்தை கெடுத்து விடுவது போல் மெய்யழகன் படத்திலும் அதேபிரச்சனை இருப்பதாக கூறியிருக்கிறார்.
கார்த்தி, அரவிந்த் சாமி இருவரின் உரையாடல்களே படம் நீண்டு கொண்டே செல்வது ரசிகர்களின் பொறுமையை ஒரு கட்டத்துக்கு மேல் சோதித்து விடுகிறது.
லியோ படத்தின் டைட்டிலிலேயே லியோ என வைத்துவிட்டு அனிருத் மூச்சுக்கு 300 தடவை லியோ பேடாஸ்-னு பாட்டு போட்டுவிட்டு நீ தான் லியோவா? லியோ தான் நீயா? என்று கிளைமேக்ஸ் வரை அர்ஜுன் கேட்டுத்தொல்லை செய்வார்.
அதே போல், மெய்யழகன் என கார்த்தியின் பெயர் வைத்துவிட்டு கடைசி வரை அரவிந்த் சாமி கார்த்தியின் பெயரை தெரிந்துக்கொள்ள போராடுவது எல்லாம் பெரிய அக்கப்போராக இருப்பதாக ப்ளூ சட்டை மாறன் மெய்யழகன் படத்தினை மோசமாக கலாய்த்திருக்கிறார்.