மிஸ் சென்னை பட்டம் வென்ற த்ரிஷா.. நடிகையாவதற்கு முன் எப்படி இருக்கிறார் பாருங்க
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார் த்ரிஷா. 20 வருடங்களுக்கும் மேலாகியும் தனக்கென்று தனி மார்க்கெட்டை உருவாக்கி அதில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார்.
சோலோ ஹீரோயினாக ஒரு பக்கம் கலக்கினாலும், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி கமல் - சிம்பு இணைந்து நடித்து வரும் தக் லைஃப் படத்திலும் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
நடிகை த்ரிஷா சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் மாடலின் செய்துகொண்டிருந்தார் என்பதை நாம் அறிவோம். அதே போல் அவர் மிஸ் சென்னை என்கிற பட்டத்தையும் வென்றுள்ளார். இந்த தகவலை பலரும் கேள்விப்பட்டிருந்தாலும் கூட, த்ரிஷா மிஸ் சென்னை பட்டம் வென்ற காட்சியை பார்த்திருக்க வாய்ப்பு இல்லை.
இந்த நிலையில், மிஸ் சென்னை பட்டம் வென்றபோது நடிகை த்ரிஷா எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
பலரும் பார்த்திராத த்ரிஷாவின் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..
