வீட்டு நிகழ்ச்சிக்கு கூப்பிட்டும் வேண்டுமென்றே அஜித்தை ஒதுக்கிய இயக்குனர்!! உண்மையில் இதுதான் காரணம்..
தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை என்ற படத்தின் மூலம் இயக்குனராகியவர் இயக்குனர் மோகன் ஜி. இப்படத்தினை தொடர்ந்து திரெளபதி, ருத்ர தாண்டவம் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கி இருந்தார். தற்போது செல்வராகவனை வைத்து பகாசுரன் என்ற படத்தினை இயக்கியிருக்கிறார்.

பகாசுரன் இன்று திரையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் இயக்குனர் மோகன் ஜி அளித்த பேட்டியொன்றில் அஜித் சாரை பார்க்க வாய்ப்பு கிடைத்தும் அதை வேண்டும் என்றே ஒதுக்கிவிட்டேன் என்று கூறியுள்ளார்.
திரெளதி படத்தின் போது அஜித்தை பற்றிய பதிவுகளை போட்டு வந்த மோகன் ஜி, அவருடன் எடுத்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியானது.
அஜித் தனக்கு திரெளபதி படம் பார்த்துவிட்டு வாழ்த்து கூறினார் என்ற செய்தி வெளியானதை தொடர்ந்து அது பொய் என்றும் 5 வருடங்களுக்கு முன் எடுத்த புகைப்படம் தான் என்றும் கூறியிருந்தார் மோகன் ஜி. அதன்பின் ருத்ர தாண்டவம் படத்தில் நடித்த அஜித்தின் மச்சினர் ரிச்சர்ட் ரிச்சி, அவர்களின் வீட்டு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தார்.

அஜித் சாரின் தீவிரமான ரசிகர் என்றாலும் நிகழ்ச்சிக்கு சென்றால் அவருடன் புகைப்படம் எடுக்க ஆசையாக இருக்கும். அதை எப்படி சிலர் நினைப்பார்களோ என்று தான் அந்த நிகழ்ச்சிக்கு வேண்டுமென்றே செல்லாமல் ஒதுக்கிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது அஜித் சாரை சந்திக்க ஆசையாக உள்ளது. தற்போது பகாசுரன் படம் அந்த எண்ணைத்தை மாற்றும் இவன் அப்படி மட்டும் படம் எடுக்க மாட்டான் இப்படியும் எடுப்பான் என்ற இமேஜை உருவாக்கும் என்று பேட்டியில் கூறியிருக்கிறார். அப்போது அவருடன் போட்டோ எடுத்தால் சூப்பராக இருக்கும் என்று தெரிவித்துள்ளார் மோகன் ஜி.
