விஜய்க்கு எப்படி புஸ்ஸி ஆனந்தோ, சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன் தாஸ்..

Sivakarthikeyan Tamil Actors Bussy Anand
By Jai Oct 08, 2026 11:00 AM GMT
Report

நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் தன்னுடைய நற்பணி இயக்க நிர்வாகிகளை சந்தித்து பேசியது தற்போது பரபரப்பான பேசுபொருளாக மாறியுள்ளது. அந்த நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், நற்பணி மன்ற மாநிலத் தலைவர் மோகன் தாஸ் குறித்து உணர்ச்சிவசமாக பேசியுள்ளார்.

விஜய்க்கு எப்படி புஸ்ஸி ஆனந்தோ, சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன் தாஸ்.. | Mohandas For Sivakarthikeyan Who Is He

சிவகார்த்திகேயன் பேசுகையில், நீங்கள் இப்போது இத்தனை பேர் இங்கே இருக்கிறீர்கள். ஒவ்வொரு முறையும் உங்களை சந்திக்கும் போது நீங்கள் செய்யும் நல்ல விஷயங்களை பார்க்கும் போது எனக்கு தோன்றியது. இது வெறும் ஒரு விளையாட்டான நற்பணி மன்றமாக மட்டும் இருந்துவிடக்கூடாது என்ற பயம் எனக்கு இருந்தது.

மோகன் தாஸ்

இந்த நற்பணி மன்றத்தை யாரை வைத்து இயக்குவது என்ற கேள்வி இருந்தது. அந்த மாதிரியான நேரத்தில்தான் உங்களையும் என்னையும் இணைக்கும் அந்த நபர் ரொம்ப முக்கியமானதாக இருக்கனும். அப்படி எனக்கு என் வாழ்க்கையில், நம்ம வாழ்க்கையில் கிடைத்திருக்கிற வரம், மோகன் தாஸ் அண்ணன். 9 ஆண்டுகளுக்காக இந்த நற்பணி மன்றத்தை அதிகாரப்பூர்வமாக நடத்திட்டு வருகிறோம்.

இன்றைய தேதி வரைக்கும் ஒருநாள் கூட, எனக்காக இதை செஞ்சு கொடுங்க, என் பையனுக்காக இதை செஞ்சு கொடுங்கன்னு மோகன் தாஸ் அண்ணன் கேட்டத்தில்லை, நம்ம தம்பிகளுக்காக இதை பண்ணனும் என்றுதான் எப்போதும் கேட்டிருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

விஜய்க்கு எப்படி புஸ்ஸி ஆனந்தோ, சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன் தாஸ்.. | Mohandas For Sivakarthikeyan Who Is He

இதனை பார்த்த பலரும் விஜய் எப்படி புஸ்ஸி ஆனந்த் இருக்கிறாரோ? அதேபோல் தான் சிவகார்த்திகேயனுக்கு மோகன் தாஸ் இருக்கிறார் என்றும் விரைவில் அரசியலில் இறங்குவாரா? என்றும் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.