வதந்திகளுக்கு ஏ.ஆர். ரஹ்மானின் மகன் அமீன் பதிலடி..

A R Rahman Divorce
By Kathick Nov 23, 2024 02:36 AM GMT
Report

முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது மனைவி சாயிராவை விவாகரத்து செய்யப்போவதாக அறிவிப்பு வெளிவந்தது. இது ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

29 ஆண்டுகள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், இருவரும் பிரிய முடிவு செய்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மானின் விவாகரத்து அறிவிப்பு வெளிவந்த சில மணி நேரத்திற்கு பின், சில தவறான வதந்திகள் இணையத்தில் பரவியது.

வதந்திகளுக்கு ஏ.ஆர். ரஹ்மானின் மகன் அமீன் பதிலடி.. | Mohini Dey Is Not Reason For Ar Rahman Divorce

இந்த நிலையில், ஏ.ஆர். ரஹ்மானின் மகன் அமீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இதற்கு பதிலடி கொடுத்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

"என் அப்பா ஒரு legend. அவர் இசையமைப்பிற்காக மட்டும் அல்ல, அவர் பல வருடங்களாக சேர்ந்து வைத்த மரியாதை, மதிப்பு மற்றும் அன்பு தான் காரணம். அவரை பற்றி பொய்யான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் புறப்படுவதை பார்க்கும்போது மனமுடைந்து போனேன். இப்படி பொய் தகவல்களை பரப்பாதீங்க" என பதிவு செய்துள்ளார். 

Gallery