13 வயதில் நான் எடுத்த தவறான முடிவு..இப்போ புரிது!! நடிகை மோகினி எமோஷனல்..

Mohini Tamil Actress Actress
By Edward Feb 25, 2026 11:45 AM GMT
Report

நடிகை மோகினி

90ஸ் காலக்கட்டத்தில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்தவர்கள் முக்கியமானவர் தான் நடிகை மோகினி. ஈரமான ரோஜாவே, புதிய மன்னர்கள், உடன்பிறப்பு, நான் பேச நினைப்பதெல்லாம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். தெலுங்கு, மலையாள மொழிகளிலும் நடித்து வந்த மோகினி, ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தினார்.

13 வயதில் நான் எடுத்த தவறான முடிவு..இப்போ புரிது!! நடிகை மோகினி எமோஷனல்.. | Mohini Opens Up The Decision She Took At 13

சமீபத்தில் மோகினி அளித்த பேட்டியில், 13 வயதில் தான் எடுத்த ஒரு முடிவு என்னுடைய வாழ்க்கையின் பாதையை முழுவதுமாக மாற்றியதாகவும், பிரபலத்தைவிட கல்வி முக்கியம், வாழ்க்கையில் நிலைத்திருக்க அடித்தளம் தேவை என்று கூறியிருக்கிறார்.

டான்ஸ் கிளாஸ்க்கு சென்று கொண்டிருந்தபோது தான் இந்த மாற்றம் தொடங்கியது. அப்போது கோடை மழை படத்தின் மூலம் பிரபலமான நடிகை வித்யா, அதே டான்ஸ் கிளாஸில் கற்றுக் கொண்டிருந்தார்.

13 வயதில் தவறான முடிவு

கோடை மழை படம் கமிட்டானப்பின் ஒருநாள் முழு மேக்கப்புடன் - லிப்ஸ்டிக் போட்டு முகம் பளிச்சென கிளாஸ்க்கு வந்ததை பார்த்ததும், நானும் இப்படியே நடிகையாகி பிரபலமாக வேண்டும் என்ற ஆசை வந்தது.. அந்த ஆசை தான் படிப்பை விட்டுவிட்டு சினிமாவுக்குள் வரவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது. சினிமாவில் வாய்ப்பு கிடைத்தபோது அதை பெருமையாக தோழிகளிடம் கூறுவேன்.

13 வயதில் நான் எடுத்த தவறான முடிவு..இப்போ புரிது!! நடிகை மோகினி எமோஷனல்.. | Mohini Opens Up The Decision She Took At 13

அந்நேரத்தில் படிப்பை தொடர்ந்து இருந்தால் வாழ்க்கை இன்னும் நன்றாக இருந்திருக்கும். அப்போது நமக்கு பிரபலமாக வேண்டும் என்பதுதான் முக்கியம், வாழ்க்கைக்கு எது முக்கியம் என்று யோசிக்கவே இல்லை. படிப்பு மனிதனுக்கு முக்கியம் என்று இப்போதுதான் புரிகிறது.

சின்ன வயதில் என் கண்கள் குறித்து பலரும் பாராட்டியதால் கவனம் கிடைத்தது. அதனால் இன்னும் பெரிய பிரபலாக வேண்டும் என்ற ஆசை உருவானது. சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், அது நிரந்தரமில்லை என்பதை காலம் உணர்த்தியது என்று நடிகை மோகினி தெரிவித்துள்ளார்.