பணப்பெட்டியோடு வெளியேறிய கானா வினோத்!! மனைவி பாக்யா போட்ட பதிவு..
கானா வினோத்
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது 94 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் பார்வதி - கம்ருதீனுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் எவிக்ட்டாகி வெளியேறி போட்டியாளர்கள் உள்ளே வருகிறார்கள்.

தற்போது பணப்பெட்டி டாஸ்க் நடந்து வரும் நிலையில், 18 லட்சம் மதிப்பிலான பணப்பெட்டியை போட்டியாளர் கானா வினோத் எடுத்துச் சென்றுள்ள பிரமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
மனைவி பாக்யா
கானா வினோத்தின் இந்த செயலால் அவரது ரசிகர்கள் அதிருப்தியடைந்து ஏன் இப்படி செய்தார் என்று கூறி வருகிறார்கள். அதேபோல் கானா வினோத் பணப்பெட்டியை எடுத்ததால், அவருக்கு அதோடு சேர்த்து 95 நாட்கள் சம்பளமாக சுமார் ரூ.45 லட்சத்துடன் வீட்டிற்கு சென்றிருப்பதை நினைத்து பலரும் பாராட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் கானா வினோத்தின் மனைவி பாக்யா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு பதிவினை பகிர்ந்தது நெகிழ வைத்துள்ளது. அதில், எவ்ளோ லவ்வுங்க, வினோத் மேல பாசம் காட்டுவதில் என்னையே ஓவர் டேக் பண்ணிட்டீங்க, இந்த அன்பைவிடவாங்க அந்த டைட்டில் பெரிசு என்று கூறியிருக்கிறார்.