தொலைக்காட்சியில் அதிகளவு கவர்ந்த நடிகைகள்! இந்த பிக்பாஸ் நடிகைதான் டாப் ஃபர்ஸ்ட்

biggboss cookwithcomali ramyapandian pavithralakshmi roshiniharipriyan
By Edward May 29, 2021 02:14 PM GMT
Report

தொலைக்காட்சி சேனல்களின் மூலம் சீரியல்கள், நிகழ்ச்சிகள் அதிகளவில் மக்களை கவர்ந்து வருகிறது. அதிலும் சமீபத்தில் ரியாலிட்டி ஷோக்களும் நெடுந்தொடர்களும் இளைஞர்கள் மத்தியிலும் ஈர்த்து பெரியளவில் பேசப்பட்டும் பகிரப்பட்டும் வருகிறது.

அந்தவகையில் தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் 2020 ஆண்டின் அதிகளவு மக்களை கவர்ந்த நடிகைகளின் வரிசை வெளியாகியுள்ளது. முதல் இடம் - பிரபல பத்திரிக்கை வெளியிட்ட வரிசை அட்டவணையில்,

முதல் இடத்தில் இருப்பவர் நடிகை ரம்யா பாண்டியன். படங்களில் நடித்திருந்தாலும் தொலைக்காட்சிகளில் குக்வித் கோமாள், பிக்பாஸ் நிகழ்ச்சி என ரசிகர்கள் அனைவராலு விரும்பத்தக்கபடி இருந்துள்ளார்.

2 ஆம் இடத்தில் பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி கவர்ந்து வரும் பாரது கண்ணாம்மா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ரோஷினி ஹரிபிரியன்.

3 ஆம் இடத்தில் உங்களில் யார் அடுத்த பிரபு தேவா மற்றும் மானாட மயிலாட நிகழ்ச்சிகள் மூலமும் சில குறும்பட தொடர்களிலும் நடித்த பவித்ரா லட்சுமி. இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பல ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

இதையடுத்து, 4ஆம் இடத்தில் நாயகி சீரியல் நடிகையும் தொகுப்பாளினியுமன நக்‌ஷத்ரா நாகேஷ். 5ஆம் இடத்தில் சத்யா சீரியலில் போல்ட் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆயிஷா.

6 ஆம் இடத்தில் பிக்பாஸ் நடிகையும் சீரியல் நடிகையுமான ஷிவானி நாராயணன். 7 ஆம் இடத்தில் சீரியல் நடிகை ஆலியா மானசா. எப்போது மக்கள் மனதில் இவர் நல்ல ஒரு பெயரை பெற்று வருகிறார்.

8ஆம் இடத்தில் தொகுப்பாளினி டிடியும், 9 ஆம் இடத்தினை கிகி விஜய்யும், 10 ஆம் இடத்தில் சந்தினி தமிழரசனும் பிடித்துள்ளனர். ஆனால் மறைந்த விஜே சித்ராவின் பெயர் டாப் 20 இடத்தில் கூட பிடிக்காமல் இருப்பது தான் ரசிகர்களிடையே வருத்ததை அளித்துள்ளது.