உலகத்திலேயே அதிக செலவு செய்த திருமணம்!! நம்ம அம்பானி தான் டாப்பு..
இந்தியாவை தாண்டி உலகளவில் திருமண கொண்டாட்டங்களுக்கு அதிக ஈடுபாட்டை கொடுப்பது வழக்கமான ஒன்று. அப்படி உலக வரலாற்றில் மிகவும் அதிக செலவு செய்து கல்யாணத்தை நடத்தியவர்களில் இந்தியாவில் இருப்பவர்கள் தான் அதிகமாம். முக்கியமாக வணிக குடும்பங்களால் மட்டுமே அதிகளவில், ஆரம்பரமாக நடந்துள்ளதாம். அந்தவகையில் உலகளவில் திருமண கொண்டாட்டங்களின் வரலாற்றில் அதிகமாக செலவு செய்யப்பட்ட 7 திருமணங்களும் பணவீக்க புள்ளி விவரங்களை தற்போது தோராயமாக கணக்கிடப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
- 2004ல் இந்தியாவின் ஸ்டீல் தொழில்துறையின் அதிபரான லட்சுமி மிட்டலின் மகள் வனிஷா மிட்டல் - அமித் பாட்டியாவின் திருமணம் பிரான்சின் வெர்சாய்ஸில் உள்ள அரண்மனையில் சுமார் $55 மில்லியன் டாலர்(இன்றைய மதிப்பு $90மில்லியன்) செலவில் செலவு செய்யப்பட்டுள்ளது.
- இந்திய சுரங்கத்தொழிலின் கிங் மேக்கர் என்று கூறப்படும் கலி ஜனந்தன ரெட்டி மகள் பிராமணி ரெட்டி - ராஜீவ் ரெட்டிக்கும் இடையே 2016ல் $74 மில்லியன் டாலர் செலவு திருமணம் நடந்துள்ளது.
- சஹாரா குழுமத்தின் நிறுவனர் சுப்ரதா ராய் தனது இரண்டு மகன்களின் திருமணத்தை 2004ல் நடத்தினார். 27 தனியார் ஜெட் விமானங்கள், 200 கார்கள் மற்றும் 11 ஆயிரம் விருந்தினர்கள் கலந்து கொண்ட இந்த திருமணத்திற்கு $75 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டது.
- முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி - ஆனந்த் பிரமல் ஜோடிக்கு 2018ல் $100 மில்லியன் டாலர் மதிப்பில் இந்தியாவில் நடைபெற்றது.
- 1979ல் கேஷ் முகமது பின் ரஷீத் அல் மக்தூம்-க்கும் UAE அரச குடும்பத்தை சேர்ந்த ஷேக் ஹிந்த் என்பவருக்கும் $45 மில்லியன் டாலர் செலவு திருமணமும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த ஒரு வாரகால கொண்டாட்டங்களுக்கு $137 மில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது.
- இந்த நூற்றாண்டின் திருமணம் என்று வர்ணிக்கப்படும் இளவரசர் சார்லஸ் - இளவரசி டயானா திருமணம் 1981ல் நடைபெற்றது. இத்திருமணத்திற்கு $45 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டது. டயானாவின் கவுனில் மட்டும் 10 ஆயிரம் பவளக் கற்கள் கொண்டது. இன்றைய மதிப்பு $163 மில்லியன் டாலராம்.
உலக வரலாற்றில் மிகப்பெரிய பிரம்மாண்ட திருமணமாக கருதப்படுவது என்றால் அது முகேஷ் அம்பானி - நீதா அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் தான். இத்திருமணத்திற்கு 5 ஆயிரம் கோடிக்கும் மேல் செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு வந்த ரிஹானாவிற்கு 9 மில்லியன் டாலரும், ஜஸ்டின் பைபருக்கு $10 மில்லியன் டாலரும் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.