அந்த விசயத்தில் இரு லேடி சூப்பர் ஸ்டார்களை ஓரங்கட்டிய சமந்தா!! விவாகரத்துக்கு பின் இப்படியொரு முன்னேற்றம்...
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் சினிமாவிலும் கால்பதித்து வருபவர் நடிகை சமந்தா. நாக சைதன்யாவை விவாகரத்துக்கு செய்தப்பின் பல படங்களில் போல்ட்டான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அப்படி புஷ்பாவில் ஐட்டம் பாடல், தி ஃபேமிலிமேன் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து இதுவரை இல்லாத கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டும் அனைவரது கவனத்தை ஈர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் இந்தியா முழுவதும் அதிகமாக பாப்புலரான நடிகைகளில் லிஸ்ட்டை ஆர்மேக்ஸ் ஸ்டார் ஊடகம் வெளியிட்டுள்ளது. அதில் நவம்பர் மாதம் எடுத்த கணக்கெடுப்பில், முதல் இடத்தினை பாலிவுட் நடிகை ஆலியா பட் பிடித்திருக்கிறார்.
அவரை அடுத்து இரண்டாம் இடத்தில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் நடிகை சமந்தா பிடித்திருக்கிறார். அவருக்கு அடுத்ததாக பாலிவுட் நடிகைகளான தீபிகா படுகோன் 3வது இடமும், கேத்ரினா கைஃப் 4வது இடமும் பிடித்துள்ளனர்.
அவர்களை தொடர்ந்து 5வது இடத்தில் திரிஷாவும், 6வது இடத்தில் நடிகை நயன் தாராவும் பிடித்துள்ளனர். அவர்களை தொடர்ந்து கியாரா அத்வானி, காஜல் அகர்வால், ராஷ்மிகா மந்தனா, அனுஷ்கா செட்டி போன்ற நடிகைகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.
அப்படி இரு லேடி சூப்பர் ஸ்டார் நடிகைகளான தீபிகா படுகோன், நயன் தாராவை ஓரங்கட்டி டாப் 2வது இடத்தினை பிடித்திருக்கும் சமந்தாவிற்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
