Live-ல் தற்கொலை முயற்சி செய்த யூடியூபர் பிரியாணி மேன்!! பதறியடித்து ஓடிய வந்த தாய்..

Youtube Viral Video Social Media
By Edward Jul 29, 2024 07:30 AM GMT
Report

யூடியூப் சேனல் ஆரம்பித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற பலர் தற்போது பல விஷயங்களில் சிக்கி வருகிறார்கள். அப்படி யூடியூப் சேனல் ஆரம்பித்து பிரபலமான இர்ஃபான் புகழ் உச்சிக்கு செல்லும் போது சில சரச்சைகளிலும் சிக்கினார். சில மாதங்களுக்கு முன் கார் விபத்து ஏற்படுத்தி மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரிதாகியது.

Live-ல் தற்கொலை முயற்சி செய்த யூடியூபர் பிரியாணி மேன்!! பதறியடித்து ஓடிய வந்த தாய்.. | Mother Stopping Biryani Man Attempting Suicide

ஆனால் அந்த விபத்தை இர்ஃபான் ஏற்படுத்தியதில்லை அவரது உறவினர் தான் என்று கூறப்பட்டது. இது பெரிய பஞ்சாயத்து ஏற்பட இது குறித்து பிரியாணி மேன் என்ற யூடியூப் பிரபலம் அவர் பற்றி விமர்சித்து வந்தார்.

இந்நிலையில் பிரியாணி மேன் அபிஷேக் யூடியூப் லைவில் பேசியவாறு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். தன்னுடைய தற்கொலைக்கு காரணம் ஜேசன் என்பவர் தான் என்று லைவில் கூறியவாறு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அவரின் லைவ் வீடியோவை பார்த்த நண்பர்கள், அபிஷேக்கின் அம்மாவிற்கு இதை தெரிவித்துள்ளனர்.

Live-ல் தற்கொலை முயற்சி செய்த யூடியூபர் பிரியாணி மேன்!! பதறியடித்து ஓடிய வந்த தாய்.. | Mother Stopping Biryani Man Attempting Suicide


பதறிய அபிஷேக் அம்மா கதவை திற என்று கூறியதால் தற்கொலை முயற்சியில் இருந்து வெளியே வந்தார். தாய் தன் மகனை காப்பாற்றும் அந்த வீடியோ இணையத்தில் தற்போது பகிரப்பட்டு வருகிறது. இதனை வைத்து சிலர் மீம்ஸ் வீடியோக்களை எடிட் செய்து பிரியாணி மேன் அபிஷேக்கை கலாய்த்து வருகிறார்கள்.

தற்கொலை எதற்கும் தீர்வு கிடையாது, மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை எண்ணம் வந்தாலோ அதில் இருந்து விடுபட தமிழக அரசின் உதவி மையம் 104 என்ற எண்களை அழைக்கவும்....