இனி 7 இல்லை..நான் 8-ஆம் நம்பருக்கு மாறுகிறேன்!! ஷாக் கொடுத்த எம் எஸ் தோனி..

MS Dhoni Chennai Super Kings IPL 2026
By Edward Mar 17, 2026 11:00 AM GMT
Report

ஐபிஎல் 2026

ஐபிஎல் 2026 சீசன் வரும் 28 ஆம் தேதி ஆரம்பமாகவுள்ளது. இதற்காக அந்தந்த அணி வீரர்கள் போட்டிகளுக்கு தயாராகி வருகிறார். இதில் சிஎஸ்கே அணியும் தங்களின் பயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஐபிஎல் தொடர்பாக சிஎஸ்கே அணியின் வீரர் எம் எஸ் தோனி ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இனி 7 இல்லை..நான் 8-ஆம் நம்பருக்கு மாறுகிறேன்!! ஷாக் கொடுத்த எம் எஸ் தோனி.. | Ms Dhoni New Jersey Number 8 No 7 Ipl 2026

தோனி என்றாலே தல என்றும் நம்பர் 7-ம் தான் நினைவுக்கு வரும். ரசிகர்களும் தல ஃபார் எ ரீசன் என்று 7 என்ற எண்ணை பெருமையாக பேசி வந்தனர். தற்போது தோனி வெளியிட்ட வீடியோவில், இனிமேல் 7 கிடையாது, 8 என்று கூறியுள்ளார்.

இனி 7 இல்லை

அந்த வீடியோ பதிவில், சில எண்கள் நம்முடன் அப்படியே தங்கிவிடும். 7 எப்போதும் எனக்கு அப்படிப்பட்ட ஒன்றுதான், ஆனால் இன்று நான் 8க்கு மாறுகிறேன். அதற்கான காரணம் உங்களுக்கு விரைவில் தெரியும் என்று குறிப்பிட்டிருக்கிறார் எம் எஸ் தோனி.

இனி 7 இல்லை..நான் 8-ஆம் நம்பருக்கு மாறுகிறேன்!! ஷாக் கொடுத்த எம் எஸ் தோனி.. | Ms Dhoni New Jersey Number 8 No 7 Ipl 2026

தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் ஜெர்சி எண் 7-ஐ தோனி மாற்றவில்லை. மாறாக, இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பை கெளரவிக்கும் விதமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அந்த எண்ணிற்கு ஓய்வு அளித்துள்ளது.

2023ல் எம் எஸ் தோனியின் பங்களப்புக்கு மரியாதை செலுத்தும் விதமாகத்தான் பிசிசிஐ 7 எண்ணிற்கு ஓய்வு செய்யமுடிவு செய்தது. ஆனால் தோனி ஐபிஎல் போட்டிகளில் 7 எண் ஜெர்ச்சியைதான் அணிந்து விளையாடினார். இந்த சீசனில் 8ஐ அதற்காக தேர்வு செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.