தோனியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா! அதுவும் இந்த தொடருக்கு இத்தனை கோடியா?

csk salary ipl msdhoni chennaisuperkings
By Jai Sep 16, 2021 07:15 AM GMT
Report

சினிமா பிரபலங்களை தாண்டி அதிக சம்பளம் வாங்கும் நட்சத்திரங்களில் வரிசையில் இருப்பவர்கள் கிரிக்கெட் வீரர்கள் தான். அந்தவகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இந்திய கேப்டனாக பணியாற்றி தற்போது சர்வதேச விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்று ஐ பி எல் தொடரில் மட்டும் ஆடி வருபவர் எம் எஸ் தோனி. ஐபிஎல் போட்டி ஆரம்பித்த முதல் தொடரில் தோனியின் சம்பளமாக 6 கோடி கொடுக்கப்பட்டது.

போக போக அவரின் சம்பளம் 14 கோடி வரை கூடியது. இந்நிலையில் மொத்த ஐபிஎல் தொடரில் அதிக சம்பளம் வாங்கும் வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தினை பிடித்துள்ளார் தல தோனி. சென்னை அணிக்காக பல ஆண்டுகளாக விளையாடி வரும் தோனி மொத்த 14 சீசன்களுக்கு சுமார் ரூபாய். 150 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். ஆவருக்கு அடுத்ததாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் சுமார். 146 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.

அவருக்கு அடுத்ததாக இந்திய அணியின் தற்போதைய கேப்டன் மற்றும் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி சுமார். ரூபாய் 143.2 கோடி வாங்கியுள்ளார். செப்டம்பர் 19ல் சென்னை மற்றும் மும்பை அணி போத இருக்கும் நிலையில் ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.