முகேஷ் அம்பானியின் ரூ.15 ஆயிரம் கோடி Antila வீடு!! தினமும் தயாராகும் 4,000 ரொட்டிகள்..
முகேஷ் அம்பானி - ஆண்டிலியா
இந்தியாவின் டாப் பணக்காரர்கள் லிஸ்டில் முதல் இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி, மும்பையின் மையத்தில், நகரின் மிகவும் விலையுயர்ந்த பகுதிகளில் ஒன்றில், அவரது குடும்பத்தினருடன் 27 மாடி கொண்ட ஆண்டிலியா வீட்டில் வசித்து வருகிறார்.
ஆண்டிலியா வீட்டை பற்றிய பல தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. 15 ஆயிரம் கோடி ரூபாயில் கட்டப்பட்ட இந்த வீட்டில் பல ஆடம்பர வசதிகள் இருக்கிறது.
அந்த வீட்டில் சுமார் 600 ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களுக்காக நாளொன்றுக்கு சுமார் 4 ஆயிரம் ரொட்டிகள் தயாரிக்கப்படுவதாக புது தகவல் வெளியாகியுள்ளது.
4,000 ரொட்டிகள்
இவ்வளவு அதிக எண்ணிக்கையில் இருக்கும் ஊழியர்களுக்கு உணவு சமைப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அதற்காக அதிநவீன சமையல் உபகரணங்கள் மற்றும் திறமையான சமையல் கலைஞர்கள் குழு ஆண்டிலியா வீட்டில் உள்ளார்கள்.
ஆண்டிலியா இல்லத்தில் பணிபுரியும் தனிப்பட்ட சமையல்காரரின் மாத சம்பளம் ரூ. 2 லட்சத்தில் இருந்து அதற்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.