முகேஷ் அம்பானியின் 92.5 பில்லியன் டாலர் சொத்து!! உலகளவில் எந்த இடத்தில் இருக்கிறார் தெரியுமா?
முகேஷ் அம்பானி
உலக பணக்காரர்கள் வரிசையில் டாப் இடங்களில் இருந்து வருபவர் முகேஷ் அம்பானி. அதிலும் இந்தியளவில் முதல் இடத்தில் இருந்து தன்னுடைய சாம்ராஜியத்தை தொடர்ந்து வருகிறார்.
கடந்த ஆண்டு தன் இளைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தை பல ஆயிரம் கோடி செலவில் பிரம்மாண்டமாக முடித்தார். இதனை தொடர்ந்து தன்னுடைய தொழில் வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், Forbes Billionaires List 2025ன் படி உலகளவில் யார் யார் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்ற லிட்டை அவர்களது இணையத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
அந்தவகையில் உலகளவில் டாப் பணக்காரர்கள் வரிசையில், எலன் மஸ்க் 342 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்போடு முதல் இடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்து மார்க் ஜூக்கர்பெர்க் 216 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்போடு இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.
18-ஆவது இடம்
ஒது ஒரு பக்கம் இருந்தாலும் முகேஷ் அம்பானி கடந்த வருடத்தில் 116 அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் 17வது இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி ஒரு அடி குறைந்து 18-ஆவது இடத்திற்கு சென்றுள்ளார்.
சமீபகாலமாக ரிலையன்ஸ் குழுமத்தில் பல ஆயிரம் கோடி மதிப்பு இழப்பீடு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து 92.5 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்போடு(இந்திய மதிப்பில் சுமார் 7.8 லட்சம் கோடி ரூபாய்) 18வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் முகேஷ் அம்பானி.