விஜய், அஜித் யாரும் வேண்டாம்! பட்டதெல்லாம் போதும்! இளம்நடிகர் பக்கம் திரும்பிய இயக்குநர்

vijay tollywood armurugadass rampotheni
By Edward Jun 01, 2021 04:40 PM GMT
Report

தமிழில் ரட்சகன் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி, தீனா, ரமணா, கஜினி, 7ஆம் அறிவு உள்ளிட்ட வெற்றிப்படங்களை அடுத்தடுத்து கொடுத்தவர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ். இதையடுத்து, நடிகர் விஜய்யுடன் துப்பாக்கி, கத்தி, சர்கார் படங்களை இயக்கி ஆட்ரிக் கொடுத்தார்.

இதற்கிடையில் எடுத்த படங்கள் சரிவர ஓடாமல் தயாரிப்பு பக்கம் சென்றார். மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்க கதை எழுதி சென்றால், தளபதி வேண்டாம் என கூறிவிட்டாராம். பின் பல முன்னணி நடிகர்களுடன் சென்று கதை கூறியும் ஏறும் ஏற்கவில்லை.

இதை பெரிய பிரச்சனையாக கருதாமல் நீங்கள் என்ன என்று, தெலுங்கு சினிமாவின் இளம் நடிகர் பக்கம் திரும்பியுள்ளாராம். ஏ ஆர் முருகதாஸ் அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் கவனிக்கப்படும் நடிகராக வலம் வருபவர் ராம் போத்தேனி என்பவரை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளாராம். தெலுங்கிலேயே இவரது படங்கள் சுமாராக தான் செல்கிறது.

இந்த நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் அவரை வைத்து படம் எடுக்க உள்ளாராம் ஏ ஆர் முருகதாஸ். ராம் போத்தேனியை வைத்து ஏற்கனவே லிங்குசாமி தமிழ், தெலுங்கில் ஒரு படம் இயக்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.