எனக்கு ஏதாவது ஆகிவிட்டாலோ!! முத்துக்குமரன் விவகாரத்தில் வஹிதா வாக்குமூலம்..
வஹிதா வாக்குமூலம்
வஹிதா என்ற பெண், பிக்பாஸ் பிரபலம் முத்துக்குமரன் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி சில நாட்களுக்கு முன் வீடியோவை வெளியிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வஹிதா, முத்துக்குமரனுடன் இருந்த வீடியோக்களை அடுத்தடுத்து வெளியிட்டு வந்தார்.

இதுகுறித்து பலரும் தங்கள் கருத்துக்களை முன் வைத்த நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வஹிதா ஒரு பதிவினை பகிர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
எனக்கு ஏதாவது ஆகிவிட்டாலோ
அதில், நான் வாக்குமூலம் அளிக்கிறேன், இனிமேலும் தொடர்ந்து வாழவும், எதிர்கொள்ளவும் திட்டமிட்டு இருக்கிறேன், ஆனால் இதற்குப்பின் எனக்கு ஏதாவது ஆகிவிட்டாலோ, நான் இறந்துவிட்டாலோ, தற்கொலை செய்துகொண்டாலோ அதற்கு காரணமானவர் யார் என்பது உங்களுக்கு தெரியும், அவர்தான் ராவணன்.

நான் இவ்வளவு வெளிப்படையாக பேசியதற்கு மக்கள் என்னை கைவிடுவார்கள் என்று நினைக்கவில்லை. இதுவரை எனக்கு எந்த மிரட்டலும் வரவில்லை, இருந்தாலும் என்னுடைய பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருந்த வாக்குமூலத்தை அளிக்கிறேன். ஏனென்றால் ஊடகங்கள், போலீஸ், வேறு யாரையும் நான் நம்பவில்லை என்று அந்த பதிவில் பதிவிட்டுள்ளார் வஹிதா.