பாலா இப்படிப்பட்டவர் தான்!! விவாகரத்துக்கு முன் பாலாவின் மனைவி கூறிய உண்மை..
முன்னணி இயக்குனராக இருக்கும் பாலா, 18 வருட திருமண வாழ்க்கை ஒருகட்டத்தில் முடிந்துள்ளது என்று விவாகரத்து செய்தியை வெளியிட்டார். கடந்த 4 ஆண்டுகளாக மனைவி முத்துமலருடன் ஏற்பட்டு வந்த மனக்கசப்பு காரணமாக விவாகரத்து பெற முடிவு செய்து கடந்த ஆண்டு சட்ட ரீதியாக பிரிந்தனர்.

மகள் இருக்கும் நிலையில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது. விவாகரத்துக்கு பின் பாலாவும் முத்துமலரும் தங்கள் வேலைகளை பார்த்து வரும் நிலையில் முத்துமலர், பாலா இயக்கிய பரதேசி படத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார்.

அப்போது பாலா பற்றி புகழ்ந்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் என்னிடம், என் பொண்ணிடம் தான் அன்பாக இருப்பார். வீட்டிற்கு வந்தால் அவருக்கு நாங்கள் தான் என்று கூறியுள்ளார். மேலும், ஒருவரை பிடிக்காமல் போனால், சண்டைபோட்டு சென்று விடுவார்.
திருமணத்திற்கு பின் எந்த பிரச்சனையாக இருந்தாலும் என்னிடம் சொல்லமாட்டார். அதன்பின் தான் போகபோக அவரை புரிந்துகொண்டேன் என்றும் அவரை தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதும் அவருக்கு என கூறியிருக்கிறார் முத்துமலர்.