விஜய்க்கு என்னுடைய வாழ்த்துகள்!! ரொம்ப நன்றின்னு சொல்லி எஸ்கேப்பான ரஜினிகாந்த்..
Rajinikanth
Vijay
Diwali
Thamizhaga Vetri Kazhagam
By Edward
தீபாவளி வாழ்த்து
சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய வீட்டிற்கு வெளியில் வந்திருந்த பத்திரிக்கையாளர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்திருந்தார்.
அனைவரும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கணும் என்றும் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்த தவெக கட்சியின் தலைவர் விஜய் நடத்திய முதல் மாநாடு பற்றி ரஜினிகாந்திடம் கேள்வி கேட்கப்பட்டது.
விஜய்
மாநாடு மிகப்பெரிய வெற்றியா நடத்தி இருக்கிறார், அவருக்கு என் வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார்.
மேலும், விஜய்யின் பேச்சு எப்படி இருந்தது என்ற பத்திரிக்கையாளரின் கேள்விக்கு ரொம்ப நன்றி என்று கைக்கூப்பி சிரித்தபடி சென்றுள்ளார் ரஜினிகாந்த்.