எனக்கு போட்டியே அந்த நடிகைகள் தான்!! சவால் விடும் பிரியா பவானி சங்கர்..

Priya Bhavani Shankar Tamil Actress Actress
By Jai Jun 03, 2023 04:15 PM GMT
Report

நியூஸ் சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி சின்னத்திரை சீரியல் நடிகையானவர் நடிகை பிரியா பவானி சங்கர்.

கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் முக்கிய ரோலில் நடித்த பிரியா, வெள்ளித்திரையில் கடைக்குட்டி சிங்கம், மேயாத மான் போன்ற படங்களில் நடித்து அறிமுகமாகினார்.

அதன்பின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வரும் பிரியா, தன்னுடைய நீண்ட நாள் காதலர் ராஜ்வேலுடன் ஈசிஆர் பகுதியில் வீடு வாங்கி குடியேறினார்.

தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் கமிட்டாகி வரும் பிரியா பவானி சங்கருக்கு போட்டி சில நடிகைகள் தான்.

சமீபத்தில் கொடுத்த பேட்டியில் ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி, ஐஸ்வர்யா லட்சுமி போன்ற நடிகைகள் தான் எனக்கு போட்டி என்று கூறியிருக்கிறாராம்.