ஒரு வாரத்துக்கு இத்தனை லட்சமா!! லட்சத்தில் புறளும் விஜய் டிவி நந்தினி..

Bigg Boss Myna Nandhini
By Edward Dec 11, 2022 01:00 PM GMT
Report

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது கமல்ஹாசன் அவர்களால் பிக்பாஸ் 6 சீசனை சிறப்பாக நடத்தி வருகிறார். அப்படி இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் இருப்பதால் நேற்று சனிக்கிழமை ராம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்.

அவரை தொடர்ந்து யார் வீட்டினை விட்டு இன்று வெளியேறுவார்கள் என்று யூகித்து கருத்துக்களை நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை பங்கேற்றும் சீரியலில் நடிகையாக நடித்தும் வந்த மைனா நந்தினி பிக்பாஸ் வீட்டில் இருந்து வருகிறார்.

சமீபத்தில் தனலட்சுமியிடம் விஜய் டிவியில் வாரம் 1.5 லட்சம் சம்பளம் வரை பெறுகிறேன் என்று கூறியிருந்தார்.

அப்படி அந்த கணக்கில் எடுத்துக்கொண்டால் இதுவரையில் மைனா நந்தினியிம் மொத்த பிக்பாஸ் சம்பளம் 90 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

இனிவரும் காலத்தில் மைனா இன்னும் 5 நாட்கள் கடந்தாலே போது 1 கோடி வரை சம்பளமாக பெறுவாராம்.