மகன் துருவன் இருக்கும் நிலையில் இரண்டாவது கர்ப்பத்தை அறிவித்த மைனா நந்தினி..

Serials Myna Nandhini Tamil TV Serials Actress
By Jai Nov 20, 2026 07:45 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சி சீரியலில் நடித்து பிரபலமான மைனா நந்தினி, யோகேஸ்வரன் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து ஒரு ஆண் இருக்கும் நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

மைனா நந்தினி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா என்ற ரோலில் நடித்து பிரபலமானவர் தான் நந்திதி. அதன்பின் மைனா நந்தினி என்று அழைக்கப்பட்டு வந்த நந்தினி, வம்சம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார்.

மகன் துருவன் இருக்கும் நிலையில் இரண்டாவது கர்ப்பத்தை அறிவித்த மைனா நந்தினி.. | Myna Yogeshwaran Announced Second Pregnancy Post

சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரையில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, தலைவன் தலைவரி, சர்தார், விருமன், அன்பறிவு, அரண்மனை 2, மூக்குத்தி அம்மன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

தன் கணவர் யோகேஸ்வரனுடன் சேர்ந்து யூடியூப் சேனல் ஆரம்பித்து அதிலும் சம்பாதித்து வருகிறார்.

இந்நிலையில் ஏற்கனவே தம்பதியினருக்கு துருவன் என்ற மகன் இருக்கும் நிலையில் தான் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக மைனா நந்தினி தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மகன் துருவன் இரு கைகளிலும் வயிற்றில் இருக்கும் குழந்தையின் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் ரிப்போர்ட் வைத்திருக்க, மைனாவின் கன்னத்தில் யோகேஸ்வரன் முத்தமிட்டபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Gallery