ஆடையில்லாமல் நடித்த ஆண்ட்ரியா.. காட்சியை நான் பார்க்கவில்லை என்று கூறிய இயக்குனர் மிஷ்கின்

Andrea Jeremiah Mysskin
By Kathick Aug 28, 2022 06:30 AM GMT
Report

மிஷ்கின் இயக்கத்தில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் பிசாசு 2. இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்து வருகிறது.

இப்படத்தில் இடம்பெறும் ஒரு முக்கிய காட்சியில் நடிகை ஆண்ட்ரியா ஆடையில்லாமல் நடிக்கவுள்ளதாக படப்பிடிப்பு முன்பு தகவல் வெளிவந்தது.

ஆடையில்லாமல் நடித்த ஆண்ட்ரியா.. காட்சியை நான் பார்க்கவில்லை என்று கூறிய இயக்குனர் மிஷ்கின் | Mysskin About Nude Scene Of Andrea In Pisasu 2

ஆனால், சில வாரங்களுக்கு முன், அந்த காட்சிகளை இயக்குனர் மிஷ்கின் படத்திலிருந்து நீக்கிவிட்டதாக தகவல் கூறினார்கள். இந்நிலையில், இதுகுறித்து இயக்குனர் மிஷ்கின் விளக்கம் கொடுத்துள்ளார்.

அவர் கூறியதாவது " படத்தில் பிசாசு 2 படத்தில் நிர்வாண காட்சிகள் படமாக்கப்படவில்லை. புகைப்படங்கள் மட்டுமே எடுக்கப்பட்டன. எனக்கும் ஆண்ட்ரியாவிற்கு பொது நண்பரான புகைப்பட கலைஞர் அந்த புகைப்படங்கள் எடுத்தார். நான் கூட அந்த புகைப்படங்களை பார்க்கவில்லை. பிசாசு 2 படத்தை குழந்தைகளும் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அந்த காட்சிகள் படத்தில் இடம்பெற்றால், தணிக்க குழு படத்திற்கு ஏ சான்றிதழ் தான் தருவார்கள். அப்போது குழந்தைகளால் இப்படத்தை பார்க்க முடியாமல் போய்விடும். அதனால், தான் அந்த காட்சிகளை நீக்கிவிட்டேன் " என்று கூறியுள்ளார் மிஷ்கின்.

ஆடையில்லாமல் நடித்த ஆண்ட்ரியா.. காட்சியை நான் பார்க்கவில்லை என்று கூறிய இயக்குனர் மிஷ்கின் | Mysskin About Nude Scene Of Andrea In Pisasu 2