மனைவியை விவாகரத்து செய்யாத இயக்குனர் மிஸ்கினின் மகளா இது!! வெளியான உண்மை தகவல்..
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் மிஸ்கின், இயக்கத்தை தாண்டி தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் விஜய்யின் லியோ படத்தில் வில்லன் ரோலில் நடித்தும் இருக்கிறார். அவர் இயக்கத்தில் பிசாசு 2 ஒருசில காரணங்களால் வெளியாகுவதில் தாமதமாகியுள்ளது.
மிஸ்கின் சில ஆண்டுகளுக்கு முன் காதல் மற்றும் மனைவியிடம் இருந்து பிரிந்த சம்பவத்தை பகிர்ந்திருந்தார். அதில், மனைவி விவாகரத்துக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றும் அதன்பின் விவாகரத்து பெறாமல் பிரிந்துவிட்டதாகவும் கூறியிருந்தார். மேலும் தன் மகள் எனக்கும் அவருக்கும் ஒரு பாலமாக இருக்கிறார் என்று சில ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டியொன்றில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில், மிஸ்கின் பொங்கல் அன்று ஒரு இளம்பெண்ணுடன் எடுத்த புகைப்படங்கம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது. அந்த இளம்பெண் மிஸ்கினின் மகள் என்று கூறப்பட்டு வந்தது.
ஆனால் அப்பெண் மிஸ்கினின் மகள் இல்லை என்றும் அவரது தீவிர ரசிகை என்றும் கூறப்படுகிறது. அப்பெண்ணின் பெயர் சுபாஷ் ராஜேந்திரன் எனவும் தொகுப்பாளினி, ஸ்டைலிஷ், மாடலிங் என்று பல துறைகளில் பணியாற்றி வருகிறார் என்றும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.