தினமும் நடிகை சரிதா காலில் விழுந்து கும்பிட்ட பிரபல இயக்குனர்!! மிஸ்கின் சொன்ன உண்மை..
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்து வரும் இயக்குனர் மிஸ்கின் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் விஜய்யின் லியோ படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ள மிஸ்கின் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்திலும் வில்லனாக நடித்துள்ளார்.
சமீபத்தில் Devil என்ற படத்தின் மூலம் முதன் முறையாக இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். சமீபத்தில் பேட்டியில் மாவீரன் படத்தில் பல ஆண்டுகளுக்கு பின் ரீஎண்ட்ரி கொடுத்த நடிகை சரிதா பற்றி பேசியிருக்கிறார்.
மாவீரன் ஷூட்டிங்கின் போது தினமும் நடிகை சரிதா காலில் விழுந்து கும்பிட்டதாகவும் அது ஏன்னு சொல்லமுடியாது.
டப்பிங் முடித்துவிட்டு வந்தபோது எனக்கு மெசேஜ் செய்திருந்தார். என்னுடைய சீனை பார்த்து நன்றாக இருந்தது என்று பாராட்டினார்.
நீங்கள் சொன்னதை நான் ஏத்துக்கமாட்டேன், அவங்க எவ்வளவு பெரிய நடிகை. நான் சாதாரணமாகத்தான் நடிச்சன்னு சொல்லி பெருமையாக கூறியிருக்கிறார் இயக்குனர் மிஸ்கின்.