லிஃப்டில் இயக்குநர் மிஸ்கின் கழுத்தை பிடித்து தள்ளிய தளபதி! பல ஆண்டு உண்மை

vijay youth chithirampesuthadi mysskin pisasu
By Edward Aug 14, 2021 10:45 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக பிரபலமானர்வ் இயக்குநர் மிஸ்கின். இயக்குநர் வின்செண்ட் செல்வாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் பிரபலமானார். இதையடுத்து, அஞ்சாதே, யுத்தம் செய், ஓணாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ போன்ற ஹிட் படங்களை கொடுத்தார்.

தற்போது நடிகை ஆண்ட்ரியா, பூர்ணா உள்ளிட்ட பிரபலங்களை வைத்து பிசாசு 2 படத்தினை இயக்கி வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் விஜய் பற்றி ஸ்வாரஷ்யமான தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், சித்திரம் பேசுதடி படத்தின் பிரிவ்யூ ஷோவை விஜய் பார்த்தார். அதுபற்றி இந்த படம் மாதிரி எனக்கு எப்போ சொல்வீங்க என்று கேட்டார்.

அதற்கு நான் படமே உங்களுக்கு தான் எழுதினேன் என்று கூறியதும், என் கழுத்தை பிடித்து இழுத்து தள்ளி ஏன் என்கிட்ட சொல்லல என்று கேட்டார். உங்க கிட்ட நான் சொல்லியிருந்தா, உங்க அப்பா 18 காட்சிகள் நீக்கியிருப்பாரு, நீங்க 18 காட்சிகள் நீக்கி இருப்பீங்க நான் தற்கொலையே பண்ணியிருப்ப அதனால வேண்டாம் என்று கூறினேன்.

விஜய்யின் யூத் படத்தில் உதவி இயக்குநராக இருந்தபோது அப்படத்தில் நடித்திருந்தார் மிஸ்கின். மேலும் 6 மாதங்களாக விஜய்யை பார்த்து பேசாமல் இருந்துள்ளார். ஏன் என்னிடம் பேசமாட்ரீங்க என்று விஜய் கேட்டதற்கு படத்தோடு வந்து பேசுறேன் என்று பதிலளித்ததாக கூறியுள்ளார் மிஸ்கின்.